Connect with us

பொதுக்குழு முடிவே இறுதியானது!! இபிஎஸ் தரப்பு வாதம்!!

ஈபிஎஸ்

தமிழகம்

பொதுக்குழு முடிவே இறுதியானது!! இபிஎஸ் தரப்பு வாதம்!!

கடந்த சில மாதங்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என நீதி உத்தர பிறப்பித்திருந்தார்.

இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உயர்நீதி நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை அமர்வானது இன்று வந்தது.

அப்போது இபிஎஸ் தரப்பில் 2,539 பொதுக்குழு உறுப்பினர்களும் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்து பிரமாண பத்திரம் அளித்துள்ளதாக இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அதோடு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்ட முடிவே இறுதியானது எனவும், இதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும் என வாதிடப்பட்டது.

மேலும், அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்ட விலை என தனிநீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறு என்று இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதோடு விசாரணையானது தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top