இங்கிலாந்து ராணியின் இறுதி சடங்கு-லண்டனில் குவிந்த தலைவர்கள்!

இன்றைய தினம் இங்கிலாந்து நாட்டில் அரசியாக இருந்த எலிசபெத் ராணி அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்தில் ஏராளமான உலகத் தலைவர்கள் குவிந்துள்ளனர்.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெறுகிறது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அரசு குடும்ப முறைப்படி இறுதி சடங்கு நடைபெறுகிறது.

லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் இருந்து உடல் எடுத்துச் செல்லப்பட்டு வெஸ்ட் மினிஸ்டர் அபேவில் அடக்கம் செய்யப்படுகிறது. கணவரான அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே ராணி எலிசபெத் தொடரும் அடக்கம் செய்யப்படுகிறது.

இறுதி சடங்கு ஆராதனை முடிந்த பின் குதிரை பூட்டிய ராணுவ வண்டியில் உடல் எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.இறுதி சடங்கு நிகழ்வில் உலக நாடுகளை சேர்ந்த அதிபர்கள், பிரதமர்கள், மன்னர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ ணைடன் பிரான்ஸ், அதிபர் மேக்ரான் உட்பட 500க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர், கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்தில் பால்மோரல் பண்ணை மாளிகையில் காலமானார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment