அரசுக்கு ஆதரவாக நீதிபதிகளின் செயல்பாடு! மக்களவையில் கொதித்த தயாநிதி மாறன்!!

எந்த ஒரு பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சரியான நீதியிலே வழங்குவது நீதிமன்றம் ஆகும். ஆனால் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு சந்தேகம் அவ்வப்போது எழுகிறது. இதுகுறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

தயாநிதி மாறன்

அதன்படி இந்திய நீதித்துறையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் தலையிட வேண்டாம் என்று மக்களவையில் தயாநிதிமாறன் வலியுறுத்தியுள்ளார். நீதித்துறையில் ஆட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்துவதாக சாதாரண மக்களுக்கு சந்தேகம் உள்ளதாக தயாநிதிமாறன் பேசியுள்ளார்.

மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நீதித்துறையில் அரசு தலையிட வேண்டாம் என்று தயாநிதிமாறன் வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்ற, ஐகோர்ட் நீதிபதிகள் சம்பளம், பணி நிலைமை திருத்த மசோதா மீதான விவாதத்தில் தயாநிதிமாறன் இவ்வாறு பேசினார்.

நீதித்துறை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்; ஆனால் அண்மை நிகழ்வுகள் மக்களிடம் சந்தேகங்கள் எழுப்பி உள்ளன என்றும் மக்களவையில் அவர் பேசினார். அரசுக்கு ஆதரவான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளுக்கு பணி ஓய்வுக்குப் பிறகு உதவிகள் வழங்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார். இவ்வாறு மக்களவையில் தயாநிதிமாறன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment