சம்பளம் கொடுக்காத விரக்தி! முதலாளி கதையை முடித்த வடக்கன்ஸ்!!

கடந்த 3 மாதமாக சம்பளம் தராத விரக்தியில் இரண்டு வட மாநிலத்தரவர்கள் முதலாளியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி சந்தோஷ் மற்றும் பிரேம் குமார் சேர்ந்து இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்தனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் இரும்பு கடையில் வேலைக்காக சேர்த்தாக தெரிகிறது.

அதிர்ச்சி! தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா..!!

இதற்கிடையில் கடந்த 2 மாதங்களாக இளைஞர்களுக்கு சந்தோஷ் சம்பளம் கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் முதலாளி சந்தோஷை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தனர்.

அதன் ஒரு பகுதியாக சம்பவத்தன்று சந்தோஷை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இவரது அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் வடமாநில இளைஞர்களை சிறைப்பிடித்தனர். பின்னர் சந்தோஷை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

ஒரு பீர் பாட்டிலுக்கு 20 ரூபாயா? – அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

அப்போது சந்தோஷை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது 2 பேரையும் கைது செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சம்பவமானது வடமாநிலவர்களை வேலைக்கு வைத்துள்ள முதலாளிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.