என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கு ஏற்ப நம் இந்திய நாட்டில் அதிகமாக வனங்கள், வளங்கள், கனிமங்கள் போன்ற அனைத்தும் காணப்படுகின்றன. அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வனங்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் தற்போது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மேலும் மக்கள் தொகை எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பலரும் வனப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து அங்கு கட்டிடங்கள் ,சாலைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இதனால் செய்வதறியாத வனவிலங்குகள் மக்களின் இருப்பிடங்களுக்கு புகுந்து விடுகின்றன. மேலும் அங்குள்ள நிலங்களை நாசம் செய்வதோடு மட்டுமில்லாமல் கண்ணுக்கு தட்டுப்படும் மனிதர்களையும் கொல்கிறது.
இந்தநிலையில் சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் புலி ஒன்று மக்களை தாக்குவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த புலியின் தாக்குதலின் விளைவாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த புலியை T23 என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புலியை கொல்லாமல் உயிரோடு பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
ஆனால் தற்போது வனத்துறையினர் இந்த புலியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். அதன்படி சிங்காரா வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட புலியை வனத்துறையினர் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கடந்த 3 நாட்களாக புலி நடமாட்டம் குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை எனவும் வனத்துறையினர் தகவல் அளித்துள்ளனர். பரண் அமைத்து கண்காணிக்கும் பணியையும் தற்போது தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர் வனத்துறையினர்.
மேலும் புலியை பிடிக்க வயநாட்டில் இருந்து பிரத்தியோக கவச உடை அணிந்து வந்த குழுவும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது .புலி நடமாட்டம் குறித்த அறிய பந்தயங்களில் பயன்படுத்தப்படும் டிரோன் மூலமாகவும் தேடப்பட்டது. இந்தநிலையில் புலியை கண்டுபிடிக்க முடியாததால், புலியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை குழுவினர் சிலர் தற்போது தேடுதல் வேட்டையை நிறுத்தினர்.