இந்தியாவின் முடிவு வெற்றி; ருமேனியா சென்ற விமானம் மாணவர்களோடு மும்பை திரும்பியது!

நேற்றைய முன்தினம் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் உத்தரவை அறிவித்திருந்தது. இதன் விளைவாக உக்ரைன் நாட்டில் உள்ள பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி கொண்டு வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் போர் பதற்றம் நிலவுகின்றது என்ற போதே இந்தியா வரிசையாக விமானங்களை அனுப்பி அங்குள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. அந்தப்படி ஏர் இந்தியா விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ரஷ்யா போர் உத்தரவை பிறப்பித்தது.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. இதனால் அங்குள்ள மாணவர்கள் மீட்பதில் சிக்கல் நிலவியது. பேச்சுவார்த்தைக்கு பின்பு அண்டை நாடுகளின் உதவியோடு இந்திய மாணவர்கள் மீட்கப்பட்ட முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

அதன் ஒரு கட்டமாக இன்று காலை ருமேனியாவுக்கு இந்திய விமானம் சென்றது. அங்கிருந்து உக்ரேனில் படித்து வரும் மாணவர்களை அழைத்து செல்ல இந்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

இத்தகைய முடிவு வெற்றியில் அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ருமேனியாவில் இருந்து மும்பை வந்தது.  புச்சாரெஸ்டிலிருந்து மாணவர்களுடன் புறப்பட்ட விமானம் மும்பை விமான நிலையத்திற்கு வந்தது.

உக்ரேனில் படித்துவரும் மாணவர்களை அண்டை நாடான ருமேனியாவின் புச்சாரெஸ்டிற்கு அழைத்து வந்தனர். புச்சாரெஸ்டிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சுமார் 219 பேர் மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment