8 மாத குழந்தை பேசிய முதல் வார்த்தை… அதிர்ச்சி அடைந்த பெற்றோர்… வைரலாகும் வீடியோ….!

மழலையின் மொழியை ரசிக்காதவர்கள் யாரேனும் இந்த உலகில் இருப்பார்களா என்ன? கொஞ்சும் மழலை மொழியில் குழந்தைகள் பேசும் அந்த அரை குறை வார்த்தைகள் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும். எவ்வளவு சோகம் பிரச்சனை இருந்தாலும் குழந்தையின் மொழியை கேட்டால் அனைத்தையும் மறந்து உதட்டில் புன்னகை பிறக்கும்.

நம் குழந்தை எப்போதும் பேசும் என ஒவ்வொரு பெற்றோரும் ஆவலுடனும், ஆசையுடனும் காத்திருப்பார்கள். ஆனால் பிரித்தானிய நாட்டில் ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தை பேசிய வார்த்தையை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுவாக ஒரு குழந்தை முதன் முதலில் பேசும்போது அம்மா அல்லது அப்பா என்று தான் கூறும். ஆனால் இந்த குழந்தை என்ன கூறியுள்ளது என்று நீங்களே பாருங்கள். பிரித்தானியாவில் கெண்ட் கவுண்டியை சேர்ந்த Carmen Bish மற்றும் Keiren Parsons தம்பதிக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

எப்போதும் குழந்தைகள் செய்யும் சின்ன குறும்புகள் மற்றும் முதன் முதலில் பேசுவது எழுந்து நடப்பது போன்ற நிகழ்வுகளை பெற்றோர்கள் பதிவு செய்வது வழக்கம். அதேபோல் இந்த தம்பதியும் அவர்கள் குழந்தை பேசியதை வீடியோ எடுத்துள்ளனர். அப்போது அந்த குழந்தை முதன் முதலாக “alright bruv” என்ற வார்த்தையை கூறியுள்ளது.

இதனை கேட்ட அந்த தம்பதியினர் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை இணையத்தில் பதிவு செய்ய அது தற்போது மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுடன் வைரலாக சென்று கொண்டிருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment