44வது செஸ் ஒலிம்பியாட்: சொந்த மண்ணில் இந்தியா முதல் வெற்றி!!

தமிழகத்தின் தலைநகரமான சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இது இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் போட்டியாகும்.

இதற்காக நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருகை புரிந்திருந்தார். மேலும் வெளிநாட்டு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த போட்டியானது இன்று மாலை 3 மணி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டியில் தற்போது இந்தியாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோனக் சத்வானி முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

இந்தியா B அணியில் இடம் பெற்றுள்ள ரோனக் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரகுமானை தோற்கடித்தார் .

இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி உள்ளனர். மேலும் சொந்த மண்ணில் முதல் வெற்றியை இந்தியா பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. முதல் சுற்றில் வெள்ள நிற காய்களுடன் ரோனக் 36வது நகர்வில் வெற்றி வசமாக்கினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.