இந்த வயதுடையோருக்கு நாளை முதல் தடுப்பூசி !!
இந்தியாவில் 12 வயது முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மத்திய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தும் பணியினை குறிப்பிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து மார்ச் 16- ஆம் தேதி முதல் 12 வயது முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு முதல் முறையாக தடுப்பூசி போடப்படும் திட்டம் நாளை தொடங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.
நாடுமுழுவது 60 வயது உட்பட்டவர்களுக்கு நாளை மறுதினம் முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
