முதல் வெற்றியோடு தொடரை தொடங்குமா இந்தியா? காத்திருக்கும் இங்கிலாந்து;

தற்போது நம் இந்திய அணி மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் காணப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா அணியுடன் டி20 தொடரை கடினப்பட்டு சமம் செய்தது.

5 போட்டிகள் கொண்ட இந்த t20 தொடரில் இரண்டுக்கு இரண்டு கணக்கில் சமன் செய்யப்பட்டது. மேலும் ஐந்தாவது ஆட்டம் நடைபெறாமல் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் மேற்கத்திய தீவுகள் அணியோடு விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக தவான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் இந்தியா இங்கிலாந்து அணியோடு முதல் டி20 போட்டியை விளையாட உள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த வாரம் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடந்த ஆண்டு நடைபெறாமல் இருந்த டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.