Connect with us

வெளியானது மாமனிதன் படத்தின் முதல் கண்ணோட்டம்! விஜய் சேதுபதினா மாஸ் தான்!

maanmani 2

Entertainment

வெளியானது மாமனிதன் படத்தின் முதல் கண்ணோட்டம்! விஜய் சேதுபதினா மாஸ் தான்!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி கூட்டணியில் 4-வது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். விஜய்சேதுபதியின் இரண்டாவது படமான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் இணைந்து நடிக்க தொடக்கி ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், விக்ரம் படங்களில் காயத்ரி நடித்துள்ளார்.

maamani 3

இந்த படத்திற்காக முதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளார். இதையடுத்து 4 முறை தள்ளிப்போன இந்தப் படம் வருகிற 24ம் தேதி வெளிவருகிறது.

இந்த படத்தின் கதைக்களம் இரண்டு குழந்தைக்கு அப்பா அம்மாவாக விஜய் சேதுபதி,காயத்ரி நடித்துள்ளனர். மேலும் படத்திற்காக மேக்கப் போடாமல் சற்று உடல் எடையை கூட்டி நடித்தார்.

அவருடன் நிறைய படங்களில் நடித்து விட்டேன்,இன்னும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் அவருடன் நடிப்பேன் என காயத்ரியின் திறமையை புகழ்ந்து விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து சீனு ராமசாமி,மாமனிதன் படத்தில் காயத்ரி மிகச்சிறப்பாக நடித்திருப்பார். இதற்காக அவருக்கு தேசிய விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.படத்தில் 2 குழந்தைகளுக்கு தாய் நடிக்க இருப்பதால் இதற்காக பல நடிகைகளை அணுகியபோது அவர்கள் நடிக்க மறுத்து விட்டனர். ஆனால் இந்த கேரக்டரின் முக்கியத்துவம் அறிந்து காயத்ரி படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.

ரஜினியை பார்த்து காப்பி அடித்த விஜய்! டிரஸ் கலர் கூட மாற்றாமல் வெளியிட்ட ஃபஸ்ட் லுக் போஸ்டர்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top