Connect with us

TET-ஆகஸ்ட் 25ஆம் தேதியில் முதல் தாள் தேர்வு நடத்த திட்டம்!!

TRB

தமிழகம்

TET-ஆகஸ்ட் 25ஆம் தேதியில் முதல் தாள் தேர்வு நடத்த திட்டம்!!

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளுக்கும் செல்ல வேண்டுமென்றால் தகுதி தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் டிஎன்பிஎஸ்சி குழுமம் வரிசையாக காலி பணியிடங்களுக்கு தேர்வின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்து கொண்டு வருகிறது.

ஆசிரியர் பதவிகளுக்கும் TET  என்ற தேர்வு நடத்தப்படும், இந்த தேர்வில் வெற்றி பெறும் ஆசிரியர்கள் அரசு சம்பளத்தோடு நிரந்தரமான பணிக்கு நியமிக்கப்படுவர். இதற்காக தமிழகத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்து முயற்சி செய்வார்கள்.

அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நடைபாண்டிற்கான TET முதல் தாள் தேர்வை ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு வழங்கும் விபரம் ஆகஸ்ட் இரண்டாம் இடத்தில் அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வு வாரியம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top