தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடித்த சமீபத்தில் வெளிவந்த வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் போனிகபூர் – ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்துள்ள நடிகர் அஜித்குமார் புதிய கெட்டப்புகளில் வலம்வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் அது உண்டு.
இதனிடையே போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் படத்தில் அஜித்க்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடக்கவுள்ளார். அதே போல் பகவதி பெருமாள், அஜய் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் கே.ஜி.எஃப் 2-வில் வில்லனான சஞ்சய் தத் தான் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு வில்லனாக களமிறங்கி உள்ளதால் படத்தின் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
#Thunivu FirstLook, Padam ninnu pesum.. Don't worry ???????????? #NoGutsNoGlory
pic.twitter.com/YW3GxGTbjW— Magizh Thirumeni (@MagizhDirector) September 21, 2022
தற்போது ஏகே 61 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி, படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர்.