2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் கிடையாது! கலைவாணர் அரங்கத்திற்கு இடமாற்றம்;

ஜனவரி 5ஆம் தேதி வருகின்ற புதன்கிழமை அன்று 2022 ஆம் ஆண்டின் முதல் தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதி புதன்கிழமை மீண்டும் கலைவாணர் அரங்கத்திலே சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்ததை அடுத்து சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை கூடுவதை அடுத்து எம்.எல்.ஏக்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் இரு இடங்களில் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. 2022ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்த இருந்த நிலையில் நோய் தொற்று காரணமாக கலைவாணர் அரங்கத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment