ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு திருவிழா தொடங்கியது!

தமிழகத்தில் அதிகப்படியான வாடிவாசல் கொண்ட மாவட்டங்களாகவும், அதிகப்படியான ஜல்லிக்கட்டுப்போட்டி நடைப்பெறும் மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது. அதன் படி, நேற்றுமுன் தினம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற இருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழிக்காட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்ததால் ஜனவரி 8-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப்போட்டி நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

மதுரை: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா!

தற்போது அனைத்து பாதுகாப்புகளும் நிவர்த்தி செய்யப்பட்டு கோலாகலமாக ஜல்லிக்கட்டி போட்டி தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜல்லிக்கட்டு காளைகள் மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உறுதிமொழி வாசிக்க தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

குடிபோதையில் அநாகரீகம்: பெண் மீது சிறுநீர் கழித்தவர் கைது!!

இந்த போட்டில் 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அதே சமயம் ஒரு சுற்றுக்கு 25 பேர் என விளையாட்டில் கலந்து கொண்டுள்ளனர். வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்காக தொடர்ச்சியாக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.