முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பிறந்தாலே குடும்பத்தில் பல்வேறு விதமான பிரச்சனைகள் உருவாகும் என்ற ஐயத்தில் பெற்றோர்கள் காணப்படுவார்கள். ஆனால் இன்றோ பெண் குழந்தைகள் இல்லை என்று வருத்தப்படும் அளவிற்கு பெண் குழந்தைகள் மீது பெற்றோருக்கு ஏக்கம் உருவாகியுள்ளது.
இவ்வாறு ஏக்கத்தில் இருந்த பெற்றோர் ஒருவர் பெண் குழந்தை பிறந்ததும் அசத்தியுள்ளார். அதன்படி தனக்கு பெண் குழந்தை பிறந்ததும் ஆனந்தத்தில் தந்தை அந்த குழந்தையை ஹெலிகாப்டரில் வீட்டுக்கு அழைத்து வந்த சம்பவம் நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது,
அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் புனேயில் நிஷாந்த் என்பவர் தங்களது பரம்பரையில் இதுவரை யாருக்கும் பெண் குழந்தை பிறக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் தங்களது பரம்பரையில் முதல் முறையாக பெண் குழந்தை பிறந்ததால் ஆனந்தத்தில் தந்தை நிஷாந்த் அந்த குழந்தையை வாடகை ஹெலிகாப்டரில் ஏற்றி தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
ரூபாய் ஒரு லட்சத்திற்கு ஹெலிகாப்டரில் வாடகைக்கு அந்த குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் தந்தை, இந்த சம்பவம் இந்தியாவில் உள்ள அனைத்து திசைகளிலும் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.