வட தமிழகத்துக்கு போகும் ஓபிஎஸ்! தென் தமிழகத்திற்கு வரும் ஈபிஎஸ்!! இன்று முதல் அதிமுக தேர்தல் பரப்புரை;

வருகின்ற 19ஆம் தேதி நம் தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் சின்னமும் இன்றைய தினமே ஒதுக்கப்படுகிறது.

இதனால் வேட்பாளர்கள் பலரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் எதிர்க்கட்சியான அதிமுக இன்று முதல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி எதிர்கட்சி தலைவரை எடப்பாடிபழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளனர். இன்று முதல் வருகின்ற 15ஆம் தேதி வரை ஓபிஎஸ்ஸும் 14ஆம் தேதி வரை ஈபிஎஸ்ஸும் தேர்தல் பரப்புரை மேற்கொள்கின்றனர்.

காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கரூரில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். சிவகாசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment