இந்தியா தனது முதல் டிரா முடிவு-இரு வீராங்கனைகளுக்கும் அரை புள்ளி!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் உலகில் உள்ள பல நாடுகள் பங்கேற்று விளையாடிக் கொண்டு வருகின்றன.

ஆனால் பாகிஸ்தானோ விளையாட்டில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளது. எனவே பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்கு திரும்பினர். இந்த நிலையில் இன்றைய தினம் விளையாடிய அனைத்து போட்டியிலும் இந்தியா தொடர்ந்து வெற்றியினை பெற்றுக் கொண்டு வருகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் இந்தியா தனது முதல் சமன் முடிவினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்திய வீராங்கனை பிரத்யுஷா டிரா செய்தார். சிங்கப்பூர் வீராங்கனை யாங் கசலை எதிர்த்து விளையாடிய இந்திய சீ பிரிவு வீராங்கனை டிரா செய்தார். ஆட்டம் டிராவில் முடிந்தால் இரு வீராங்கனைகளுக்கும் தலா அரைப்புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய ஏ அணி வீரர்கள் ஹரி கிருஷ்ணா மற்றும் நாராயணன் ஆகியோர் மால்டோவா அணியை வீழ்த்தினார்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.