10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு!

இன்று காலையில் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் பொதுத் தேர்வு நடைபெறும் என்று கூறியிருந்தார்.

அதோடு கட்டாயம் திருப்புதல் தேர்வு மாணவ மாணவிகளுக்கு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஜனவரி 19ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி  28ம் தேதி வெள்ளிக்கிழமை வரை முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெறுகின்றன என்று தகவல் கிடைத்துள்ளது.

அதேவேளையில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஜனவரி 19ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி ஜனவரி 27-ஆம் தேதி வியாழக்கிழமை வரை முதல் திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment