ஸ்டாலின் ஆட்சியில் முதல்முறை….; அமைச்சர்களின் இலாகா மாற்றம்!!

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு புதிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக முதல் முறையாக ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் பல்வேறு சீர்திருத்தங்களை மாற்றங்களையும் கொண்டு வருகிறார்.

முன்னதாக தினம்தோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் தங்களது துறைகள் மாற்றம் செய்யப்பட்டு காணப்பட்டன. இந்தநிலையில் அமைச்சர்களுக்கு தற்போது நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் ஒரு கட்டமாக அமைச்சர்கள் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன் சிவசங்கரின் துறைகளை மாற்றி ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி அமைத்த பிறகு முதல்முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment