‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு!’ இன்று முதலீட்டாளர்கள் மாநாடு!!

நேற்றைய தினம் தமிழகத்தில் புதிய மண்டலமாக கோவை மாநகரம் அறிவிக்கப்பட்டது. இவை திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மண்டலமாக கோவை மண்டலம் திகழும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஸ்டாலின்

இந்நிலையில் கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்றைய தினம் நடைபெற்றது. அதன்படி கோவை கொடிசியா வளாகத்தில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு” என்ற பெயரில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்றைய தினம் நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. தமிழ்நாடு நிதிக்கொள்கை 2021 மற்றும் வான்வழி மற்றும் பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேடு வெளியிடப்பட்டது.

இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 52 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது அதன்படி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூபாய் 34 ஆயிரத்து 723 கோடி முதலீட்டில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க வழிவகை செய்துள்ளது. இதனால் 74 ஆயிரத்து 835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. அதன்படி வான்வெளி, பாதுகாப்பு துறை உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டங்களை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர்  ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை விரைவில் எட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்தார். வான்வெளி, பாதுகாப்பு துறை தொடர்பான பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment