Connect with us

கொந்தளித்த மர்ம நபர்கள்; டாஸ்மாக் கடைக்கு தீவைப்பு-366 மது பாட்டில்கள் எரிந்து சேதம்!

tasmac 236

செய்திகள்

கொந்தளித்த மர்ம நபர்கள்; டாஸ்மாக் கடைக்கு தீவைப்பு-366 மது பாட்டில்கள் எரிந்து சேதம்!

கொந்தளித்த மர்ம நபர்கள்; டாஸ்மாக் கடைக்கு தீவைப்பு-366 மது பாட்டில்கள் எரிந்து சேதம்!

தமிழகத்திற்கு அதிக வருமானம் தரும் வியாபாரம் என்றால் அதனை டாஸ்மாக்  என்றே கூறலாம். இந்த நிலையில் பல பகுதிகளில் சட்டவிரோதமாக இயக்கப்படும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. பல பள்ளிகள் பக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு வருகின்றன.

எதிர்க் கட்சி சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழகத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராக குரல் எழுந்த வண்ணமாக காணப்படுகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் டாஸ்மாக் கடையை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தியது பெரும் பரபரப்பை உருவாக்கியது. டாஸ்மாக் கடைக்கு தீ வைத்ததால் அங்கிருந்த 366 மதுபாட்டில்கள் எரிந்தன.

இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரசு மதுபான கடைக்கு தீ வைத்ததில் கடையில் இருந்த 366 மதுபாட்டில்கள் எரிந்து சேதமடைந்தன.

பூட்டிய கதவுகள் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர் மர்ம நபர்கள். ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top