டிசம்பர் 9ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு;

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் மறக்க முடியாத நாளாக காணப்படுகிறது. 2021 ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மே 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கட்சி வெற்றி பெற்றது.

மாநிலத் தேர்தல் ஆணையம்

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு 9 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதிலும் பெரும்பாலான பகுதிகளில் திமுக வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த முறை பல எதிர்பார்ப்புகளோடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாத இறுதிக்குள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment