படமே வெளியாகல அதுக்குள்ள ரசிகர் மன்றமா? சீன் போடும் இளம் நடிகர்….

நடிகர்கள் சீன் போடுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சில ஹிட் படங்கள் கொடுத்து விட்டு சீன் போட்டால் பரவாயில்லை. இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை அதற்குள்ளாகவே சீன் போட்டால் எப்படி. அப்படி தான் ஒரு இளம் நடிகர் தற்போது சீன் போட தொடங்கி உள்ளார். அப்படி அவர் என்ன செய்தார் என்று பார்க்கலாம்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து சாதித்த பல நடிகர்கள் கோலிவுட்டில் உள்ளனர். தற்போது அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளவர் தான் இந்த இளம் நடிகர். ஒரு சமையல் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த நடிகருக்கு பெண் ரசிகைகள் ஏராளம்.

பல ஆண்டுகளாக படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்த இந்த நடிகருக்கு சமையல் நிகழ்ச்சி தான் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் தற்போது நடிகருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. முன்னதாக பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த அந்த இளம் நடிகர் தற்போது ஹீரோவாக நடிக்க தொடங்கி விட்டார்.

அந்த வகையில் ஹீரோவாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் முதல் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் தனது ரசிகர் மன்றத்தை தொடங்கி வைத்துள்ளாராம். இதனை கண்ட மற்ற ஹீரோக்கள் இன்னும் முதல் படமே ரிலீசே ஆகலை அதுக்குள்ளேயே இப்படி ஒரு பில்டப்பா என பேசி வருகிறார்கள்.

என்னதான் அந்த நடிகருக்கு ரசிகர்கள் ஆதரவு இருந்தாலும் ரசிகர் மன்றம் தொடங்குவதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். ஒரு படம் அல்லது இரண்டு படம் ஹிட் கொடுத்துவிட்டு இதெல்லாம் செய்தால் பரவாயில்லை. இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இம்புட்டு அலப்பறைய கூட்றதெல்லாம் கொஞ்சம் டூ மச்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment