Entertainment
லாஸ்லியா-சேரன்- கவினுக்கு இடையேயான சண்டை!!
பிக் பாஸ் நிகழ்ச்சியானது அவலங்களின் உச்சகட்டமாக ஏமாற்றுதல், வயதிற்கு மரியாதை கொடுக்காமை, காதல் செய்து ஏமாற்றுவது என சென்று கொண்டிருக்கிறது. இவை அனைத்திலும் முக்கிய பங்காற்றுபவர் கவின் ஒருவரேதான்.
பிக்பாஸ் வீட்டில் நேற்று முன்தினம் தொலைபேசியில் ஃப்ரூட்டி காலர் ஆஃப் த வீக் மூலம் ஒருவர் லாஸ்லியாவிடம் பேசினார், அப்போது, ‘ “சேரன் உங்கள் மீது உண்மையான பாசம் வைத்துள்ளார். நீங்களும் அவர் மேல் உண்மையான பாசம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் சேரனின் பாசத்தை டிராமா என கவின் கூறியபோது உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை? என்று கேட்டார்.

அப்போது லோஸ்லியா, நான் உண்மை எது? பொய் எது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் எனக்கு நான் உண்மையாக இருக்கின்றேன். இதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறினார்.
ஆனால் அந்தப் பிரச்சினை அப்போது முடிவுக்கு வரவில்லை, அதன்பின்னர் சேரன், லாஸ்லியா மற்றும் கவின் ஆகிய மூவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இவர்கள் மூவரும் முகம் கொடுத்துப் பேசிக்கொள்வதில்லை. லாஸ்லியா சேரனிடம், இதற்கு மன்னிப்பு கேட்டிருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.
