கல்லறைத் தோட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர்-தோளில் தூக்கி வந்த பெண் இன்ஸ்பெக்டர்!

காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கேற்ப தமிழகத்தில் பல பகுதிகளில் காவல்துறையினர் நண்பர்களாக செயல்பட்டு வருகின்றனர. இந்த நிலையில் பெண் காவலர் ஒருவர் இளைஞனை தூக்கி சென்ற வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 பெண் இன்ஸ்பெக்டர்!

இந்த சம்பவம் சென்னை டிபி சத்திரம் பகுதியில் நிகழ்ந்துள்ளது. அதன்படி சென்னையில் டிபி சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக உள்ளார் ராஜேஸ்வரி. இவர் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

அப்பொழுது இவருக்கு டிபி சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் மரம் பிடுங்கி விழுந்ததாக தகவல் அறிந்து உடனே ஆய்வுக்கு சென்றிருந்தார் ராஜேஸ்வரி. அங்கு கல்லறை தோட்டத்தின் அருகே இளைஞர் ஒருவர் மயங்கி கிடப்பதை கண்டார்.இந்த இளைஞருக்கு 30 வயது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அந்த இளைஞர்  மரங்களின் முறிவுகளுக்கு இடையே சிக்கி மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்ட ராஜேஸ்வரி அந்த இளைஞனை தனது தோளில் தூக்கிக்கொண்டு துரிதமாக செயல்பட்டுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் தோளில் தூக்கியபடி ஆட்டோ ஒன்றில் ஏற்றி அவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. துரிதமாக செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு வாழ்த்துக்கள் வந்து கொண்டே உள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment