மத்திய அரசு பயப்படுகிறது! விவசாயிகளின் மரணத்திற்கு ஏன் மோடி மன்னிப்பு கேட்கவில்லை?-ராகுல் காந்தி;

நம் இந்தியாவில் விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஏனென்றால் மத்திய அரசால் விதிக்கப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பெருமளவில் பாதிப்பை உண்டாக்கியது.

விவசாயிகள்

இதனால் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக சில வாரங்களுக்கு முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக கூறி இருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். அதன்படி மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

விதிக்கப் படாமல் மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ஓராண்டு ஆனது ஏன் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி கேட்டுள்ளார்.

700 விவசாயிகள் உயிரிழப்புக்கு பிறகுதான் வேளாண் சட்டங்களை ரத்து செய்திருக்க வேண்டுமா? என்று காங்கிரஸ் கட்சி என்று கேட்டுக்கொண்டார். விவசாயிகளின் மரணம் விவகாரத்தில் ஏன் பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல்காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment