Connect with us

கிணற்றில் மலைப்பாம்பிடம் சண்டையிட்ட பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி

attapady python

தமிழகம்

கிணற்றில் மலைப்பாம்பிடம் சண்டையிட்ட பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி

கிருஷ்ணகிரி அருகே மலைப்பாம்பை பிடிக்க சென்ற நபர் பாம்பிடம் சிக்கிக் கொண்டு 30 அடி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – இறந்தவர் உடல் மீட்பு – பாம்பை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே பன்னிஹள்ளி கிராமத்தை சார்ந்தவர் சின்னசாமி இவரது விவசாய நிலத்தில் கடந்த மூன்று நாட்கள் முன்பு சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை, பாம்பு புகுந்துள்ளது. அந்த மலைப்பாம்பு ஆட்டுக்குட்டி ஒன்றை விளங்கிய நிலையில் அங்குள்ள விவசாய கிணற்றின் அருகே மூன்று நாட்களாக இருந்துள்ளது.

இதனைக் கண்ட நிலத்தின் உரிமையாளர் சின்னசாமி மலைப்பாம்பை பிடிக்க அருகே உள்ள பனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் தொழிலாளர் நட்ராஜ் (60) என்பவரை அழைத்து வந்துள்ளார். இன்று காலை 30 அடி கிணற்றின் அருகே மலைப்பாம்பு இருந்தபோது நடராஜ் பாம்பை பிடிக்க முற்பட்டுள்ளார்.

அப்போது திடீரென மலைப்பாம்பு நட்ராஜின் கால் மற்றும் உடல் பகுதியை சுற்றிக்கொண்டது. இதனால் நிலை தடுமாறி நடராஜ் பாம்புடன் சிக்கிக்கொண்டார் அவரை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு அருகே இருந்த 30 அடி கிணற்றுக்குள் நடராஜுடன் விழுந்தது. இதில் தண்ணீரில் மூச்சு திணல் ஏற்பட்டு நடராஜ் உயிரிழந்தார்.

இதை அறிந்த நிலத்தின் உரிமையாளர் சின்னசாமி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்புடன் சிக்கிக்கொண்ட நடராஜ் தேடினர். நீரில் மூழ்கி நடராஜ் உயிரிழந்த நிலையில் மலைப்பாம்பு அவரை விட்டுவிட்டு கிணற்றுக்குள் பதுங்கி கொண்டது இதனால் தண்ணீரில் மிதந்த நடராஜன் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர் அதைத்தொடர்ந்து மலைப் பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top