பசுக்கள் மீது புகார் அளித்த விவசாயி… காரணம் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர்…..

இதுவரைக்கும் மனுஷங்க மேல காவல் நிலையத்தில் புகார் அளித்து தான் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம். ஆனால் கார்நாடகா மாநிலத்தில் விவசாயி ஒருவர் அவர் வளர்த்து வரும் பசுக்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் அருகே சிட்லிபுரா என்ற கிராமத்தில் வசித்து வரும் ராமய்யா என்ற விவசாயி தனது வீட்டில் 4 பசு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். ராமய்யா தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பால் கறப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆனால் கடந்த சில நாட்களாக, ராமய்யாவின் பசுக்கள் பால் சுரக்கவில்லை. அதே சமயம் ராமய்யா பால் கறக்க சென்றால் அவரை மாடுகள் காலால் எட்டி உதைத்து வந்துள்ளன. ஆனால் ராமய்யாவின் மனைவி ரத்னம்மா பால் கறந்தால் மாடுகள் எதுவும் செய்யாமல் நின்றுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமய்யா தனது 4 மாடுகளையும் ஒலேஒன்னூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்துள்ளார். புகாரில் ராமய்யா கூறியிருப்பதாவது, “நான் வளர்த்து வரும் பசு மாடுகள் 5 நாட்களாக பால் சுறக்க விடுவதில்லை. மேலும் என்னை காலால் எட்டி உதைத்து வருகின்றன. எனவே மாடுகளுக்கு புத்திமதி கூறி பால் கறக்கும் போது மாடுகள் பால் சுரக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்

ராமய்யாவின் இந்த புகாரை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர்கள் என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் முழித்துள்ளனர். பின்னர் ராமய்யாவிடம் பேசிய காவலர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வேடிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment