மீண்டும் வில்லனாக மிரட்ட வரும் பிரபல இயக்குனர்…. இனிமே டைரக்ஷன் கிடையாது போல…..

வித்தியாசமான படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த இயக்குனர் தான் செல்வராகவன். இவர் தற்போது அவரது தம்பியும் நடிகருமான தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது செல்வராகவன் படங்களை இயக்குவதை விட நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர்
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ள சாணி காயிதம் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இப்படம் வெளியாகும் முன்பே நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு செல்வராகவனுக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து திரொளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கும் புதிய படத்தில் லீட் ரோலில் செல்வராகவன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஒரு புதிய படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த புதிய படத்தை மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்க உள்ளாராம்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் செல்வராகவன் கமிட்டாகி வருவதால் இனி படங்களை இயக்குவாரா என்பதே சந்தேகமாக உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment