Connect with us

இந்தியன் 2 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்! காரணத்தின் தெரியுமா?

indian 2 pic

பொழுதுபோக்கு

இந்தியன் 2 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்! காரணத்தின் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இப்படம் வெளிவந்து ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது. படம் வெளியாகி 25 நாட்களில் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

indian2 1 1596707504 1620644050

அதை தொடர்ந்து விக்ரம் படத்திற்கு முன்பாகவே ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. படப்பிடிப்பு தளத்தில் விபத்து மற்றும் கொரோனா தாக்கம் என ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலையே நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவுக்கு கமல் அனுப்பிய ஒரு குறுச்செய்தியின் மூலம் இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து தற்போது வந்த தகவலின்படி இந்தியன் 2 திரைப்படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் இடம் பெற்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

sankar indian 2 1607655431

மேலும் இந்த படத்தின் முதல் பட்ஜெட் 350 கோடியாக இருந்தது,அடுத்தபடியாக கலந்து ஆலோசித்து 240 கோடிக்கு படம் உருவாக்கிவிடலாம் என பேசப்பட்டது.ஆனால் இந்த படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் படத்தை 225 கோடிக்கு பட்ஜெடை குறைக்கும்படியாக பேசிவருகிறது.இந்த படத்திற்காக முன்னதாகவே 125 கோடி செலவு செய்து முடித்ததாகவும் கூறியுள்ளது.

அடுத்ததாக மீதமுள்ள 100 கோடியை வைத்து தான் படம் தயாரிக்க வேண்டும் நிபந்தனையை படக்குழு உள்ளது. அதனால் லைகா புது முயற்சியாக உதயநிதி அவர்களிடம் தற்பொழுது லைகா தயாரித்து வரும் இந்தியன் 2 ,பொன்னின் செல்வன் 1, பொன்னின் செல்வன் 2 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கலைஞர் தோலைகாட்சிக்கு விற்று அதற்கு பதிலாக தேவையான தொகையை பெற்று இந்தியன் 2 படத்தி முடிக்க முடிவு செய்துள்ளது.

விக்ரம் படத்துக்காக கமல் செய்த வேலை தெரியுமா? கமல் வொர்கவுட் வீடியோவை வெளியிட்ட லோகேஷ்!

லைகா நிறுவனத்திற்கு ஏற்பட்ட பண தட்டுபாட்டின் காரணமாக இப்படி ஒரு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top