மாநாடு படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்….!

கடந்தாண்டு வெளியான தமிழ் படங்களில் குறிப்பிட்ட சில படங்கள் இதர மொழி ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது. அதில் முக்கியமான படம் தான் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு. முதன் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சிம்பு கூட்டணி அமைத்திருந்த இந்த படம் பட்டி தொட்டியெங்கும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது.

டைம் டிராவல் படங்களை விட டைம் லூப் கான்செப்ட் படங்களை கையாள்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் வெங்கட் பிரபு அதை மிக சாமர்த்தியமாக கையாண்டு ரசிகர்களுக்கு புரியும்படி மாநாடு படத்தின் திரைக்கதையை காட்சிப்படுத்தி இருப்பார். தற்போது வரை இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளித்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என கூறியிருந்தார். மேலும் படத்தின் கிளைமாக்ஸிலும் இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட் இடம்பெற்றிருந்தது.

வரலாறு காணாத வெற்றி பெற்ற மாநாடு படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற பலர் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநாடு படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவும், தெலுங்கில் திரையரங்கு டப்பிங் செய்யவும் சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் அதிக விலை கொடுத்து கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநாடு படம் வெளியான சில நாட்களிலேயே கோடிக்கணக்கில் வசூல் செய்து லாபம் ஈட்டி தந்த நிலையில், தற்போது ரீமேக் உரிமை மூலம் ஒரு பெரிய தொகை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவின் திரை வரலாற்றிலேயே இப்படி ஒரு ஹிட் படம் கொடுத்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment