கனமழை! முறிந்து விழுந்த மரம்… நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி!

கனமழை காரணமாக சென்னை கொரட்டூரில் பழமை வாய்ந்த மரம் முறிந்து சாலையில் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் சென்னையையிலும் கனமழை பெய்து வருகிறது.

அதிர்ச்சி! கர்நாடகாவில் தேர் கவிழ்ந்து விபத்து.!

இந்நிலையில் கொரட்டூர் பகுதியில் நீர் தேங்கியதால் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

அதே போல் 5 இரு சக்கர வாகனம் நசுங்கி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே மரம் விழுந்ததால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சட்னியில் கரப்பான்பூச்சி! தனியார் உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு..!!

மேலும், மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். தற்போது மரம் முறிந்து சாலையில் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment