சரிந்து விழுந்தது தங்கத்தின் விலை; சவரனுக்கு இவ்வளவு குறைவா? ஆச்சரியத்தில் பொதுமக்கள்!

விலை நிலையில்லாத பொருள் என்றால் அதனை தங்கம் என்றே கூறலாம். இந்த நிலையில் நாம் தினந்தோறும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தை பார்த்துக்கொண்டு வருகிறோம். சில நாட்களாகவே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைவாகவே காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மிக குறைவாக விற்பனை செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

gold rate 00

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 184 குறைந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக ஆபரண தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4,519க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூபாய் 36 ஆயிரத்து 152 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை வீழ்ச்சி நகை பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது, இதனால் சந்தோஷத்தோடு வர்த்தகர்கள் காணப்படுகின்றனர்.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ64.60 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment