ஜல்லிக்கட்டில் சோகம்; வெளியே வந்த கண்! பார்வையை பறிகொடுத்த இளைஞர்.!!

காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகம் எங்கும் சுற்றுலா தளங்கள் பொதுமக்களால் நிரம்பி காணப்படுகிறது. இன்றைய தினம் தமிழகத்தின் மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியானது தமிழர்களின் வீர விளையாட்டுகளில் பிரதான ஒன்றாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக மிகவும் பிரபலமாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

இதில் அமைச்சர்கள், நடிகர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பான வீர விளையாட்டாக இருந்தாலும் அங்கு விளையாடும் வீரர்களுக்கும், ஒரு சில நேரங்களில் பார்வையாளர்களுக்கும் காயங்கள் ஏற்படும். எதிர்பாராத விதமாக உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் மற்றுமொரு இடத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் ஒருவருக்கு பார்வை பறிபோனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாடு முட்டியதில் இளைஞர் சிவகுமாரின் பார்வை பறிபோனது. காளை முட்டியதில் பள்ளப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் சிவகுமாரின் வலது கண் வெளியே வந்து பார்வை பறிபோனது.

இளைஞர் சிவகுமார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மாடுபிடி வீரர் சிவகுமார் சோர்வடைந்து தடுப்பு கம்பி வேலி ஓரமாக அமர்ந்திருந்த போது காளை குத்தியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.