Connect with us

வாழைத் தோட்டத்தில் இதையா வளர்க்கிறது? தட்டி தூக்கிய போலீசார்..

வாழைத் தோட்டம்

செய்திகள்

வாழைத் தோட்டத்தில் இதையா வளர்க்கிறது? தட்டி தூக்கிய போலீசார்..

வேலூர் அருகே வாழைத் தோட்டத்தில் பயிரிடப்பட்டு ஆள் உயரத்தில் செழித்து வளர்ந்த மூன்று கிலோ எடையிலான கஞ்சா செடிகள் பறிமுதல்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தில் தஞ்சா (எ) முனியன் (60) என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல் துறை போதை பொருள் ஒழிப்பிற்காக வெளியிட்டுள்ள பிரத்தியேக வாட்ஸ் ஆப் எண்ணில் வந்த ரகசிய தகவல் அடிப்படையில் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன், குடியாத்தம் துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் 3 கிலோ எடையிலான 42 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓடிய தோட்ட உரிமையாளர் முனியனை குடியாத்தம் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தும் பிரதான வழித்தடமாக வேலூர் இருந்து வந்த நிலை மாறி தற்போது வேலூரிலேயே கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ள சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top