Connect with us

தமிழ் மொழியின் சிறப்பையும் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்: தமிழக ஆளுநர் !!

ஆர் என் ரவி

Tamil Nadu

தமிழ் மொழியின் சிறப்பையும் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்: தமிழக ஆளுநர் !!

தமிழ் மொழியின் செழுமையை நாட்டின் பிற மாநிலங்களுக்கும் சேர்க்க வேண்டுமென தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் மாணவர்களுக்கு ஆளுநரும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தருமான ஆர்.என் ரவி பட்டங்களை வழங்கி கெளரவித்தார். இதன் பிறகு அவர் பட்டமளிப்பு விழாவில் உறையாற்றினார்.

அப்போது பேசிய அவர் தமிழ்மொழியின் செலுமையை பிறமாநிலங்களுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

பிற மாநிலங்களின் பல்கலைகழகங்களில் தமிழ் மொழி குறித்த இருக்கையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர், அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top