போர் இழப்புகள் அனைத்தும் ரஷ்யாவுக்கே; உக்ரைனுக்கு ஆதரவு தரும் ஐரோப்பிய ஒன்றியம்!

இன்றைய தினம் உலக நாடுகளுக்கு மிகவும் அதிர்ச்சியான உத்தரவை புடின் அறிவித்தார். ஏனென்றால் ரஷ்ய அதிபர் புடின் இன்று காலை உக்ரைன் நாட்டின் மீது போர் புரிய உத்தரவிட்டிருந்தார். தற்போதுவரை உக்ரைனை மெல்ல மெல்ல ரஷ்யா கைப்பற்றிக் கொண்டு வருகிறது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் ஐரோப்பிய ஆணையம் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி உக்ரைனை மட்டுமல்ல ஐரோப்பாவின் நிலைத்தன்மையை சீர்குலைப்பது ரஷ்யாவின் இழக்கு என்று ஐரோப்பா ஆணையம் கூறியுள்ளது.

போரால் ஏற்படும் இழப்புகளுக்கு ரஷ்யாவை பொறுப்பேற்க செய்வோம் என்று ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது. ஐரோப்பாவில் போர் வருவதற்கு காரணம் ரஷ்ய அதிபர் புடின் தான் என்றும் ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் துணை நிற்பதாக உறுதியளித்துள்ளது. இறையாண்மையுள்ள நாட்டின் மீது ரஷ்யாவின் தாக்குதல் இதுவரை இல்லாதது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

ஐரோப்பிய நிதி சந்தையில் ரஷ்யா வங்கிகளுக்கான வணிகத் தொடர்பை நிறுத்துவோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து பேசிய பின் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment