கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய பல்கலைக்கழகங்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றினை கூறியிருந்தது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் அறிவித்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தற்போது திமுக காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுதான் இந்த CUET என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அதன்படி மத்திய பல்கலைக் கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்த முடிவு 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
2010 முதல் அமல்படுத்தப்பட திட்டத்தை அப்போதே திமுக எதிர்க்காததது ஏன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் கடந்த 12 ஆண்டுகளில் தேர்வின் மூலம் மாணவர்களை தேர்வு செய்கிறது என்றும் பாஜக மாநில தலைவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்காக தமிழக அரசின் பாடத்திட்டம் சிபிஎஸ்சி இணையாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு தமிழிலும் மாணவர்கள் எழுத முடியும் என்று அண்ணாமலை கூறினார்.