என்னப்பா சொல்றீங்க இங்கிலாந்து கேப்டனை யாரும் ஏலத்தில் எடுக்கலையா?

நேற்றைய தினம் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான ஏலம் தொடங்கியது. இந்த ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. நேற்று, இன்று என இரண்டு நாட்கள் ஏலம் நடத்தபடுகிறது.

இந்த நிலையில் நேற்று பல இந்திய வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்க பட்டார்கள். இந்த நிலையில் இன்றைய தினமும் ஏலம் ஆனது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வைஸ் கேப்டன் ரஹானே அடிப்படை விலைக்கே எடுக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இந்திய வீரர் அஜிங்கியா ரஹானேவை அடிப்படை விலை ரூபாய் 1 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலம் எடுத்தது. இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் விலை போகவில்லை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனை யாரும் ஏலத்தில் வாங்கவில்லை அவரோடு இங்கிலாந்து வீரர் டேவிட் மாலனும் விலை போகவில்லை. இந்திய வீரர் மன்தீப் சிங்கை 1.1 கோடிக்கு டெல்லி கேப்பிடல் அணி வாங்கியுள்ளது. தென்ஆப்பிரிக்கா வீரர் மார்க்ரமை ரூபாய் 2.60 கோடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment