புகார் கொடுக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை வீசிய ஊழியர் சஸ்பெண்ட்!!

தமிழகத்தில் தற்போது பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது மின்சார கட்டண உயர்வு தான். ஏனென்றால் இது குறித்து தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டு மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார்.

அப்போது பேசிய அவர் தமிழகத்தில் இனி மின் கட்டணம் உயர்த்தப்படும் என்றும், இந்த மின் கட்டணம் உயர்வு எட்டு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தமிழகத்தில் அமல்படுத்த உள்ளதாக கூறினார்.

மேலும் ஒரு வீட்டிற்கு ஒரு மின்மாற்றி மட்டுமே வழங்கப்படும் என்பதனையும் அவர் கூறியிருந்தார். இதனால் தமிழக மக்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். மேலும் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக மத்திய மின்சாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்கும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், எம்பிக்கள் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டனர்.

மேலும் அவரின் உரையின் ஆரம்பத்திலேயே கடும் கண்டனம் தெரிவித்தனர். இவ்வாறு மின் சாரம் பற்றி தொடர்ந்து அதிருப்தி நிலவிக் கொண்டுள்ள நிலையில் மின்வாரிய ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஏனென்றால் அவர் மின் மீட்டரை தூக்கி இருந்ததாக புகார் வந்துள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் புகார் கொடுக்க வந்தவர்கள் மீது மின்மீட்டரை தூக்கி வீசிய ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடத்தி மின்சார வாரிய ஊழியர் குப்புராஜை சஸ்பெண்ட் செய்தனர் மின்வாரியத்துறை அதிகாரிகள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment