Connect with us

இன்றோடு நிறைவுக்கு வருகிறது ‘தேர்தல்’…!! மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு;

simple

செய்திகள்

இன்றோடு நிறைவுக்கு வருகிறது ‘தேர்தல்’…!! மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு;

இன்றோடு நிறைவுக்கு வருகிறது ‘தேர்தல்’…!! மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு;

இந்தியாவில் கடந்த மாதம் முதல் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதன்படி உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக இன்றைய தினம் இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒன்றான மணிப்பூரில் இரண்டாம் கட்ட சட்டசபை வாக்குபதிவு நடைபெறுகிறது. அதன்படி இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவை ஆறு மாவட்டங்களில் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது.  மணிப்பூரில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முன்னாள் முதல்வர் ஓ இபோபி சிங் தேர்தலில் தெளபால் தொகுதியில் போட்டியிடுகிறார். மணிப்பூர் மாநிலத்தில் முதலாம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28ஆம் தேதி நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் இன்றைய தினம் நடக்கின்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, மணிப்பூர் மாநிலத்தில் இறுதி கட்ட வாக்குப்பதிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top