Connect with us

தேர்தலால் கொரோனா பாதிப்பை குறைத்து காட்டவில்லை! மொத்தமே 20 நோயாளிகள் தான்!!

கொரோனா

தமிழகம்

தேர்தலால் கொரோனா பாதிப்பை குறைத்து காட்டவில்லை! மொத்தமே 20 நோயாளிகள் தான்!!

தேர்தலால் கொரோனா பாதிப்பை குறைத்து காட்டவில்லை! மொத்தமே 20 நோயாளிகள் தான்!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனாவின் பாதிப்பு அடிமட்ட அளவிற்கு குறைந்து விட்டது. இது பலருக்கும் சந்தோஷத்தை அளித்தாலும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஏனென்றால் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை குறைத்து அறிவிக்கப்படுவதாக பேசப்பட்டு வந்தன.

அதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தினம்தோறும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துக் கொண்டே வந்தது. இந்த நிலையில் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அதன்படி நகர்ப்புற தேர்தலுக்காக கொரோனா பாதிப்புகளை தமிழக அரசு ஒன்னும் குறைத்து காட்டவில்லை என்று மா.சுப்பிரமணியன் கூறினார். கிண்டி கிங் மருத்துவமனையில் 800 படுக்கைகள் உள்ள நிலையில் அதில் 20 பேர்தான் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

இதனால் தேர்தலால் தான் கொரோனா  பாதிப்பு குறைந்தது என்ற சர்ச்சையான விமர்சனங்களுக்கு அவர் ஆதாரத்தோடு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இது குறித்து இனிமேல் விமர்சனங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top