அபராதம் சொன்னவுடனே வழக்கு வாபஸ்! பணி நியமனத்தை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது!!

நம் தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து கொண்டு வருகிறது.

அதே வேளையில் இன்று சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதே வேளையில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஊரகப்பகுதி அரசு ஊழியர்களை தேர்தல் ஆய்வாளர்களாக நியமிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

தற்போது அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஏனென்றால் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று கூறியது.

இதனால் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக நீதிபதிகள் எச்சரித்ததை அடுத்து அதிமுக நிர்வாகி வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment