இபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு!! – எதற்காக தெரியுமா?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது உச்சம் தொட்ட நிலையில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினரிடம் கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியிடம் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய என்ற அடிப்படையில் 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அழைப்பானது தற்போது இபிஎஸ் தரப்பினருக்கு வழங்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வாக்காளர் மற்றும் ஆதார் வாக்கு பட்டியல் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் தற்போது இபிஎஸ் அவர்களுக்கு அழைப்பு விடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது விடுத்துள்ள அழைப்பானது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment