தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் உடன் நிறைவடைவதால் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் 12,738 பதவிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நாளை மறுநாள் நடைபெற இருப்பதால் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைபெறும் என்றும் இதற்காக மாநகராட்சிகளில் 15,158 வாக்குச்சாவடிகளும் நகராட்சிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும் பேரூராட்சிகளில் 8454 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
சென்னையில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குபதிவு அலுவலர்கள் வீதம் 1,33,000 தேர்தல் பணிகளில் ஈடுபடஉள்ளனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்திட தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.