இந்த ஆண்டு 7 இடங்களில் அகழ்வாய்வு! கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாய்வு நடத்த திட்டம்!
தொன்றுதொட்டு வாழ்ந்து தமிழக மக்களின் அனைத்து குறிப்புகளும் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 7 இடங்களில் அகழ்வாய்வு நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொல்லியல் அகழாய்வுகள் சங்ககால கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி அகழ்வாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்று காலம் வரை தொல்லியல் இடங்களில் அகழாய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ளார். பண்டைத் தமிழர் சமூகத்தின் பண்பாட்டு, விழுமியங்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அகழ்வாய்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
விருதுநகர், திருநெல்வேலி துலுக்கர்பட்டி, தர்மபுரி பெரும் பாலையில் முதற்கட்ட ஆய்வு நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். கீழடியில் எட்டாம் கட்ட அகழ்வாய்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, மணலூரில் எட்டாம் கட்ட தொல்லியல் ஆய்வு நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தூத்துகுடி மாவட்டம் சிவகலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
அரியலூர் கங்கை கொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார். தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரம் எதிரே ஆற்றங்கரையோரம் கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சங்ககால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தை கண்டறிய கடலோரங்களில் ஆய்வு நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
