நீண்ட நாட்களாக அறிவிப்பு இல்லாமல் பணிக்கு வராத ஆசிரியர்கள், அடிக்கடி விடுமுறையில் உள்ள ஆசிரியர்களின் விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவு அனுப்பியுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், முன்னறிவிப்பின்றி விடுப்பில் உள்ளவர்களின் விவரங்களை உடனடியாக தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என செய்தி வெளியிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு போட்டியில் 14 பேர் காயம்!
“நீண்ட விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள், நீண்ட நாட்களாக பணிக்கு வராமல் இருப்பது, தொடர் விடுப்புகள், விவரங்களை அவசரமாக சேகரித்து, மின்னஞ்சல் மூலம் உடனடியாக அனுப்ப வேண்டும்” என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.