அவசர கட்டுப்பாட்டு மையம்: 24 மணி நேரமும் இருக்கணும்! வானிலை செய்தி: மக்களுக்கு உடனே தெரிவிக்கணும்!

தற்போது நம் தமிழகத்தில் வானிலை ஆனது பெரும் மழை பெய்வதாக காணப்படுகிறது. இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி வானிலை குறித்த செய்திகள் அனைத்தும் மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.ஸ்டாலின்

வானிலை குறித்த முன்னெச்சரிக்கை செய்திகளை பொதுமக்கள் மற்றும் மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். சமூக ஊடகங்கள் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அவசர கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் உரிய துறை அலுவலர்களோடு செயல்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவசர கட்டுப்பாட்டு மையங்களை பொதுமக்கள் 1070 மற்றும் 1077 தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆழ்கடலுக்கு சென்று உள்ள மீனவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க மீன்வளத் துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.பாதிப்புக்குள்ளாகும். பகுதிகள் என தனித்தனியாக பல்துறை மண்டல குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குடிசைப் பகுதிகள், கடலோர மீனவ குடியிருப்புகளை மண்டல குழுக்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment