Connect with us

2.2 கோடி ரூபாய் செலவில் இ-நூலகம் அமைக்கப்படும்!!-அசத்தலான அறிவிப்பு;

e library

செய்திகள்

2.2 கோடி ரூபாய் செலவில் இ-நூலகம் அமைக்கப்படும்!!-அசத்தலான அறிவிப்பு;

2.2 கோடி ரூபாய் செலவில் இ-நூலகம் அமைக்கப்படும்!!-அசத்தலான அறிவிப்பு;

நம் தமிழகத்தில் கல்வித் துறையில் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளது ஏனென்றால் அடுத்தடுத்து மாணவர்களுக்கு பிரயோஜனம் அளிக்கும் விதமான நலத் திட்டங்களை தமிழக அரசு அறிவித்து கொண்டுவருகிறது.

அவற்றுள் இ-நூலகம் அமைக்கும் திட்டமும் அதற்கான நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி ரூபாய் 2.22 கோடி செலவில் இ-நூலகம் அமைக்கப்பட உள்ளது. இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

சுமார் 275 கல்லூரி விடுதிகளில் இந்த இ-நூலகம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாணவர்கள் குறைவாக உள்ள விடுதிகளில் மறுசீரமைப்பு 15 கல்லூரி விடுதிகள் ரூபாய் 1.40 கோடி மீண்டும் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

பள்ளி மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 3,224 இடங்களில் ரூபாய் 42.36 லட்சம் செலவில் கல்லூரி மாணவியர் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சொந்த கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் வாடகையில் இயங்கிவரும் இரண்டு விடுதிகளுக்கு ரூபாய் 6.75 கோடி செலவில் மீண்டும் கட்டிடம் கட்டித் தரப்படும் என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

மதுரை, தேனியில் உள்ள மூன்று கள்ளர் மேல்நிலைப் பள்ளிகளில் ரூபாய் 1.17 கோடி செலவில் உண்டு உறைவிட பள்ளி அமைத்து தரப்படும் என்றும் கூறினார். மதுரை, திண்டுக்கல்லில் உள்ள இரண்டு கள்ளர் சீரமைப்பு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top